search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து கிராமசபை கூட்டத்தில் புகார்
    X

    கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானல் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து கிராமசபை கூட்டத்தில் புகார்

    • கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளிக்கு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கீழ்மலை வடகவுஞ்சி ஊராட்சி கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    வடகவுஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் தோழி ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் துளசிதாசன் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 15-ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் பணியாற்ற வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கு வந்திருந்த உதவி ஆசிரியர் புனிதன் கூறுகையில் இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வீரராம்பிரபு கள்ளக்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றப்பட்டார். கருவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் இல்லை. நான் ஒருவர் மட்டும் தான் உள்ளேன்.

    நான் அலுவலக வேலையாக செல்வது. கல்வி உயர் அதிகாரிகள் பல பணிகளை செய்ய சொல்வதால் என்னாலூம் இவ்வளவு தூரம் பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை என்றார்.

    பின்னர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×