என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே கருப்பாநதி பகுதியில் 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - அணைக்க வனத்துறையினர் கடும் போராட்டம்
- கருப்பாநதி அணைப்பகுதியில் கடுமையான வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மலையின் அடிவாரத்தில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது.
- கடந்த 3 நாட்களாக தீப்பற்றி எரிவதால் 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதி யில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மலையின் அடிவாரத்தில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது.
மழை குறைந்து வெயி லின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் சூழலில் காட்டு தீ அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளிட்ட வைகளுக்கும் பரவி எரிந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக கருப்பாநதி அணைப்பகுதி யை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி எரிவதால் 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக 4-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.