search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில் பரபரப்பு மர்ம காரில் உலா வரும் சந்தனக் கடத்தல் கும்பல்:போலீசார் தீவிர வேட்டை
    X

    சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட காரை படத்தில் காணலாம்.

    திட்டக்குடியில் பரபரப்பு மர்ம காரில் உலா வரும் சந்தனக் கடத்தல் கும்பல்:போலீசார் தீவிர வேட்டை

    • வனத்துறையினர் பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர்.
    • காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. புடையூர் கிராமத்தில்அரசு அனுமதியுடன் விவசாயிகள் சந்தன மரக்கன்றுகளை தங்களது விலை நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். தற்போது 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வனத்துறையினர் அவ்வாறு பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது மரம் வெட்டும் சூழ்நிலையில் உள்ளதாக பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் கூறி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாராயணசாமி (வயது 70), இவர் நிலத்தில் இருந்த 12 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தினர். நேற்று முன்தினம் இதே போல் இளங்கோவன் (40), இவரது நிலத்தில் 5 சந்தனமரங்களை வெட்டி கடத்தி உள்ளனர். தொடர்ச்சியாக மாப்புடையூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணி அளவில் காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் கார் மற்றும் அதிலிருந்த 4 நபர்களை பிடித்த போலீசார், சந்தனமர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×