search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
    X

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய காட்சி.

    விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

    • என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பாலக்கரையில் தே.மு.சார்பில் தமிழக அரசை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தி.மு.க.அரசு மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, பின்னர் குறிப்பிட்ட தகுதியுடைய மகளிருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்குவது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது போல் ஆகும். விளைநிலங்களை அழித்து வாய்க்கால் அமைத்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்த அவர், பரவனாறு வாய்க்காலை சீரமைக்கிறோம் எனக் கூறி ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி.யின் செயலை இதோடு நிறுத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும், தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். மேலும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த பிரேமலதா, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடவில்லையென்றால் தே.மு.தி.க மற்றும் விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜான கிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பண்ருட்டி புருசோத்தமன்,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பண்ருட்டி வசந்தன், மாவட்ட துணை செயலாளர் வேல் முருகன், நகர தலைவர் சங்கர், நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜ் குமார், நகர பொருளாளர், நகர் மன்ற உறுப்பினர் கருணா,நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமசந்திரன், டெய்லர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×