search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்- நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கோரிக்கை
    X

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம், கவுன்சிலர் பவுல்ராஜ் மனு அளித்த போது எடுத்த படம்.

    பாளையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்- நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கோரிக்கை

    • பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

    அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×