search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் -காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு ஆடி மாதத்தில் காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழா வின் 4-ம் நாளான இன்று காந்திமதி அம்பா ளுக்கு வளைகாப்பு உற்சவம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடை பெற்றது.

    இதற்காக செப்பு கேட யத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் சுவாமி கோவில் சென்றார்.

    பின்னர் அங்கு தன் வளைகாப்பிற்கு ஆசி வேண்ட சந்திரசேகரரும், காந்திமதி அம்பாளும் நோ் ஏதிரே காட்சி கொடுத்து ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வசைகளுடன் வர ஊா்வலமாக காந்திமதி அம்பாளை ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனா். மண்டபத்தில் எழுந்தரு ளிய உற்சவா் காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சீா்வரிசைகள், விதவிதமான வளையல்கள் அம்பாளின் முன் வைக்க ப்பட்டிருந்தன. அம்பாளுக்கு நீராட்டு நிகழ்ச்சியும், கூந்தல் கண்ணாடியில் பாா்த்து சாிசெய்யும் வைபவம் நடைபெற்றது.

    வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்ட தும் வந்திருந்த அனைத்து பக்தா்களுக்கும் வளையல், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகள் வீதி உலா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    Next Story
    ×