என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
- தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று.
- இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள்.
4-ம் திருவிழாவான 25-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதியுலா நடக்கிறது. வருகிற 31-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) இரவு 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சள் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.