என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
- ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.
ஆடித்தபசு திருவிழா
இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.
இந்த நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவி லுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 21-நதேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
சங்கரநாராயணராக காட்சி
இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான கோமதி அம்மனுக்கு சிவ பெருமான் சங்கரநாரா யணராக காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 31-தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை யினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
பாதுகாப்புத்துறை சான்றிதழ்
கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோ வில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகரா ட்சி கமிஷனர் சபா நாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேர்மன் உமா மகேஸ்வரி பேசிய தாவது:-
ஆடித்தபசு அன்று குடிநீர் பந்தல் அமைக்கும் தொண்டு அமைப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருட்களை மூடி வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை யினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.
மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் அன்னதானங்கள் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உணவுகள் தரமான முறை யில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கு, பக்தர்களு க்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்த ர்கள் ஆடித் தபசுக்கு வந்து சிறப்பாக தரிசனம் செய்து விட்டு செல்ல அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு வாகனங்கள் அவசரக்கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் சுழலும் சி.சி.டி.வி. காமிரா க்கள் அமைத்து அதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலைதுறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராம கிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்கு வரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்