என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றம்
- அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது.
- விழா நாட்களில் தினசரி சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று காலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலையில் நால்வர் சுவாமிகளின் பல்லக்கு பவனி நடந்தது.இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது. இதன் நிறைவாக கொடியேற்றம் நடந்தது.ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முக பட்டர் குழுவினர் வைபவங்களை நடத்தினர்.
நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை சார்பில் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தவமணி, அமிர்தராஜ், சைவ சித்தாந்தக் கழக தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் கற்பகவிநாயகம், அரிமா சங்க தலைவர் நடராஜன் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று மாலை திருநாவுக்கரசர் உழவாரபணி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நாளை 2-வது நாள் திருவிழாவில் காலையில் யாகசாலை பூஜையும், சுவாமி அம்பாள் சப்பர பவனியும் நடக்கின்றன. மாலையில் விசேஷ அலங்கார பூஜையும் சப்பரபவனியும் நடக்கின்றன.
இதேபோல் விழா நாட்களில் தினசரி காலையிலும் மாலையிலும் சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
7-ஆம் திருநாளான ஜூலை 2-ந் தேதி மாலை சிவப்பு சாத்தி சப்பர பவனியும், 8-வது நாள் காலையில் வெள்ளை சாத்தியும் மாலையில் பச்சை சாத்தியும் சப்பர பவனி நடக்கிறது. 9-வது நாளில் பூஞ்சப்பர பவனியும் நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.