search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட  காத்திருப்போர் அறை மீண்டும் திறப்பு
    X

    கூடங்குளம் மின்வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி முத்தையா அறையை திறந்து வைத்தார்.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை மீண்டும் திறப்பு

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.
    • இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருப்போருக்கு சாதாரண அறை மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை ஆகியவை உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் அதனை திறக்க கோரி ெரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் முன்னிலையில் கூடங்குளம் மின்வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி முத்தையா திறந்து வைத்தார்.

    இதில் துணை மேலாளர் வெங்கடேசன், வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×