search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்
    X

    மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை குழந்தைகளுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனை தொடர்ந்து அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு பெற்று செயல்படும் டி.இ.எல்.சி நாசரேத் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×