search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் பழுதான ரோடுகளை  புதுப்பிக்க நடவடிக்கை -யூனியன் கூட்டத்தில் தலைவர் தகவல்
    X

    உடன்குடி யூனியன் கூட்டத்தில் தலைவர் பாலசிங் பேசிய காட்சி.

    உடன்குடி பகுதியில் பழுதான ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை -யூனியன் கூட்டத்தில் தலைவர் தகவல்

    • அனைத்து ரோடுகளும் சீர்செய்யப்படும் என யூனியன் சேர்மன் பாலசிங் கூறினார்.
    • தங்கள் பகுதியில் உள்ள தேவைகளை கவுன்சிலர்கள் எடுத்து கூறினர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது.

    யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மீராசிரசுதீன், ஆணையாளர்கள் ஜாண்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், செந்தில், ஜெயகமலா, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி, ராமலெட்சுமி மற்றும் பல்வேறு வளர்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முதலில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா., பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    முருங்கை மகாராஜா (அ.தி.மு.க.):-

    உடன்குடி பகுதியில் கிராம புறங்களில் உள்ள ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க உடன்குடி பகுதியில் உள்ள நீர் பிடிப்பு குளங்கள் அனைத்தையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

    பாலசிங் (சேர்மன்):-

    உடன்குடி பகுதியில் உள்ள பழுதான ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரோடுகளும் சீர்செய்யப்படும், இந்த ஆண்டு நமது பகுதியில் பருவ மழைமிகமிக குறைவாக உள்ளது. இருந்தாலும் அணைக்கட்டுகளில் உள்ள தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கவுன்சிலர்கள்தங்கள் பகுதியில் உள்ள தேவைகளை எடுத்து வைத்து பேசினார்கள். அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் கூறினார்.

    Next Story
    ×