என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி 17, 18-வது வார்டுகளில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு
- தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
- 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ்நகர் மற்றும் 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் ராமர், ஜான் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.