search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்  - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினர்
    X

    பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான கல்வெட்ைட கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்த காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினர்

    • சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலை பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலை பள்ளி களுக்கான கூடுதல் வகுப்பறை கட்டி டம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    மாவட்ட கனிமவள நிதி மற்றும் என் .டி. பி. எல். தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக கூட்டான்மை பொறுப்பு நிதி ஆகியவற்றின் மூலம் கட்டிடங்கள் கட்டுவதற்கான விழா சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டு ராஜா,நகரமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன் மற்றும் மாநகர கவுன்சி லர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×