search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும்
    X

    வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும்

    • பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளம் நிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    பின்னர் உறுப்பினர்க ளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    கென்னடி (திமுக):-

    எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முற் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக):-

    எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். சியாமளா தேவி (திமுக):-எனது வார்டு பகுதியில் தினம்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    முத்துக்குமார் (பாமக):-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    வித்யா தேவி (சி பி ஐ);-

    வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனா (அதிமுக):-

    எனது பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆனந்த் (திமுக):-

    எனது பகுதியில் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பை த்தொட்டிகளை அமைத்து தர வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    பத்மாவதி (திமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோவில் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    துணைத் தலைவர்:-

    பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தலைவர்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறையற்ற ப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×