search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்- தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை, ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு அளித்த காட்சி.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்- தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரெயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பி னருமான ராஜா எம்.எல்.ஏ. சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறையும் நெருங்கி வருகின்றன. எனவே அந்த நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் தென்காசி வழியாக அக்டோபர் 24, 25 மற்றும் நவம்பர் 13,14, (திங்கள், செவ்வாய் )விடப்பட்டால் கூட்ட நெரிசலைக் குறைக்கும். மேலும் விஜயதசமி மற்றும் தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் விஜயதசமி மற்றும் தீபாவளிக்கு தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தென் தமிழகத்தில் இருந்து காத்திருப்புப் பட்டியல்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளுக்கு பெரிதும் உதவும், எனவே இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×