என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா - நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.
- தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்னதர்மம்
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.
காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.
11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடையும் நடக்கிறது. இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்