என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
- கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம்.
- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.
கோவை
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அ.தி.மு.க அலுவலக மான இதயதெய்வம் மாளி கைக்கு புறப்பட்டார்.
வரும் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை- அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். கட்சி அலுவலகத் தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரிய எழுச்சி மட்டுமல்லாமல், தொண்டர்கள் எல்லோரும் கொண்டாடக்கூடிய நிகழ்வாக அமைந்து உள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக கோவை மாவட்டத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே மீண்டும் அத்தனை திட்டங்களும் மக்களுக்கு வர வேண்டும் என்றால் எடப் பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டனர்.
அதற்கு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.
தலைமை நிலைய செயலாளராக என்னை நியமித்து உள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம். எனவே விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் 100-க்கு 100 வெற்றி பெறுவோம். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ெஜயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் செல்வக்குமார், காலனி ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்