search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் துணிகரம்:  கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    உண்டியல் உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

    விருத்தாசலத்தில் துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    • கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - காட்டுக் கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    உண்டியலில் ரூ. 5 ஆயிரம் வரை பணம் இருந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் எதுவும் இல்லை. மெயின் ரோடு பகுதியில் தான் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×