search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் பெண்களுக்கு எதிரான   வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி
    X

    ஏற்காட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.

    ஏற்காட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி

    • காவல் துறையினர் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி நடைபெற்றது.
    • பேரணியை ஏற்காடு மகளிர் திட்ட மேலாளர் மகாலிங்கம் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் காவல் துறையினர் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஏற்காடு மகளிர் திட்ட மேலாளர் மகாலிங்கம் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், மோகன், பெரியசாமி ஆகியோர் பேரணிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    ஏற்காடு காந்தி பூங்காவில் பேரணி தொடங்கி ஏற்காடு டவுன் வழியாக பஸ் நிலையம் வரை நடந்தது. இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் சென்றனர்.

    இறுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பெண் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஏற்காடு பி.டி.ஓ வெங்கடேசன் மற்றும் மகளிர் குழுவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×