என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாண்டமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
- மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான, டாக்டர் சோமசேகர் தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு அனை வரையும் வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரங்கசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் முருக வேல், கிராமக் கல்விக் குழு தலைவர் கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாமுனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரி யர்களுக்கு தற்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் ரூ. 3 லட்சம் செலவில் பாண்ட மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சீரணி அரங்கத்தை சீரமைத்து சீரணி அரங்கத்தின் முன்பு தகர மேற்கூரை அமைத்து அதற்கு கான்கிரீட் தளம் அமைத்துக் கொடுத்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்