search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி சிவன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் திருஞானசம்பந்தரை மடியில் அமர்த்திய கோலத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட காட்சி.

    ஆறுமுகநேரி சிவன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு பூஞ்ச பழத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, திருஞானசம்பந்தர் சமணர்களை வாதத்தில் வென்று திருக்கழு ஏற்றுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது.

    தினசரி காலையிலும், மாலையிலும் சப்பரபவனி நடக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 6-வது நாளான இன்று காலையில் உமையம்மை எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சப்பரபவனி நடைபெற்றது. இதில் மண்டகபடிதாரர் தவமணி, தெரிசை அய்யப்பன், குலசை இல்லங்குடி, தங்கமணி, இளையபெருமாள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியின் மண்டகப்படிதாரர்களான ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர். இன்று இரவு பூஞ்ச பழத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, திருஞானசம்பந்தர் சமணர்களை வாதத்தில் வென்று திருக்கழு ஏற்றுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×