search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கர்நாடக அரசை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    மன்னார்குடியில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கர்நாடக அரசை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்தியும் அ.ம.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை பொது செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ரங்கசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக மன்னை நகர செயலாளர் ஆனந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் இருந்து விமானம் மூலம் கர்நாடக சென்று அங்கு அனைத்து அமைச்சர்களுடன் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சினை குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேச விரும்பவில்லை.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டா லும் அ.ம.மு.க 40 தொகு திகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு செயலாளர் சங்கர், வர்த்தக பிரிவு செயலாளர் அம்பிகா சங்கர், வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செங்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அம்மா தொழிற்சங்க பேரவை மின்வாரிய பிரிவு தலைவர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மன்னார்குடி நகர, ஒன்றிய நிர்வாகிகள், நீடாமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×