search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தனியார் நிதி நிறுவன நடத்திய  முதியவர் கைது
    X

    கோவையில் தனியார் நிதி நிறுவன நடத்திய முதியவர் கைது

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • போலீசார் அங்கிருந்த 6 வங்கி காசோலை, 6 பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கந்துவட்டி, ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து ஆபரேஷன் கந்துவட்டி மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

    வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானுக்கு பேரூர் அடுத்த காளம்பாளையம் கோபாலபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் அதிக வட்டி வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பதிவு செய்யாமல் நிதி நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும் பொதுமக்களிடம் அதிக வட்டி வசூல் செய்து வந்ததும், கடனுக்கு பணம் வாங்கியவர்களிடம் இருந்து கையெழுத்து போடப்பட்ட வங்கி காசோலை, பத்திரம் ஆகியவை பெற்று வைத்திருந்ததும் கண்டுப்பிடிக்கப்ட்டது.

    இதையடுத்து போலீசார் அங்கிருந்த 6 வங்கி காசோலை, 6 பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனம் நடத்தி வந்த காளம்பாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் (வயது 51) என்பரை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×