என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி கஸ்தூரிபா மழலையர் பள்ளி ஆண்டு விழா
- விழாவுக்கு கஸ்தூரிபா கல்வி சங்க தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் அமைந்துள்ள கஸ்தூரிபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 38-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வ.உ.சி. அரசு மேல்நிலைபள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியரும், கஸ்தூரிபா கல்வி சங்க தலைவருமான ராமசுப்பு தலைமை தாங்கினார். சென்னை ஸ்டான்ஸா லிவ்விங் நிறுவனத்தின் மாநில தலைவர் ராம்பிரசாத், தொழிலதிபர்கள் அசோக்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை ஜெயலெட்சுமி, கஸ்தூரிபா பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆதிராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல், சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் நிகழ்ச்சியில் அருணாச்சலா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக பள்ளி நிர்வாகத்தினருக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதினை அறக்கட்டளையின் தலைவர் அசோக்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சரஸ்வதி சுபா மற்றும் ஆசிரியைகள் திவ்யதர்ஷினி, வேயிலம்மாள், மாரி, மதனா மற்றும் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.