search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பாரத் பள்ளியில் ஆண்டு விழா
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    சிவகிரி பாரத் பள்ளியில் ஆண்டு விழா

    • பாரத் பள்ளியின் செயலர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
    • பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பாரத் பள்ளியில் 21-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள செல்ல ம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாறுவேட போட்டிகள், யோகா, கராத்தே, மாணவ - மாணவியர்களின் கவியரங்கம், பேச்சுப்போட்டி, பரத நாட்டியம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தர வடிவேலு, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பாரத் பள்ளியின் செயலர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார். செல்லம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர்கள் டாக்டர் சுசித்ரா என்ற ஆர்த்தி, டாக்டர் சூர்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். செல்லம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் சாந்தி சரவணபாய் குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக தனுஷ்குமார் எம்.பி. , தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோ கரன், சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி செயலர் தங்கேஸ்வரன், சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, செல்லம்மாள் கல்வி அறக்கட்டளை சுசித்ரா என்ற ஆர்த்தி, ராஜகுணசீலன், ராஜேந்திர கணேசன், தனிஸ்சுலாஸ், சுகதேவ் பேராசிரியர், வனச்சரக அலுவலர் மவுனிகா, துணை த்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், மருதுபாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ராமச்சந்திரன், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களை தனுஷ் குமார் எம்பி, யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், டாக்டர் செண்பகவிநாயகம், டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கலைவாணி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை செல்லம்மாள் கல்வி அறக்கட்டளையின் செயலர், முதல்வர், சேர்மன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×