என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2019-20-ம் கல்வி ஆண்டில் பயின்றவர்கள் நெல்லை பல்கலைகழகத்தில் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- பதிவாளர் தகவல்
- நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.
- சிறப்பு துணைத்தேர்வுக்கு கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு) அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டில் இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களின் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்து பயின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற 1 முதல் 5 -ம் பருவ தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6 -ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 1 முதல் 5 பருவத்தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணக்கர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத்தேர்வு ) சிறப்புத் துணைத்தேர்வுகள் அடுத்தமாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு
மேலும் இறுதி பருவமாகிய ( இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும், சில மாணக்கர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. எனவே அந்த மாணவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சிறப்புதுணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 26-ந் தேதி ( இன்று) முதல் வருகிற 1-ந் தேதிக்குள் www.msuniv.ac.in என்ற பல்கலை கழக இணையதளத்தில் தேர்வு கட்டணமாகிய ரூ. 1,000 செலுத்தி
மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் அல்லது சிறப்பு தேர்வுகள் பல்கலை கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இத்தேர்வுகளின் கால அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.
எனவே,இந்த தேர்வு எழுத தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேதிகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மாண வர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட்களில் அணுகி தேர்வு எழுதலாம்.
இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்