search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 335 பேருக்கு பணி நியமன ஆணைகள்
    X

    முகாமை கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் எம்.பி. செல்லக்குமார், எம்.எல்.ஏ. மதியழகன் உள்பட பலர் உள்னர்.

    கிருஷ்ணகிரியில் 335 பேருக்கு பணி நியமன ஆணைகள்

    • முகாமிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
    • 335 பேருக்கு நிறு வனங்கள் சார்பில் பணி நிய மன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

    இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    அதேப்போல் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரானிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021 -22ம் ஆண்டு 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 2022-23 ஆண்டு 24 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என மொத்தம் 38 முகாம்களின் மூலம் மொத்தம் 6,418 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளார்கள்.

    மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினால், தனியார் துறை வேலை இணையத்தின் வாயிலாகவும் வேலைநாடுநர்கள் பதிவு செய்து வேலை பெற வழிவகை செய்யும் இணைப்பு பாலமாக திகழ்கிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த இணையத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 156 தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்து, இதுவரை 1221 வேலைதேடுபவர்கள் இம்மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர். பணியில் சேரும் நீங்கள் நிறுவனங்களின் தேவைக்கேற்ப தனிதிறமைகளை வளர்த்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். நிறுவனங்கள் பணியாளர்களின் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு வழங்கி வருகிறது.

    படித்து முடித்தவுடன் சிறிய வேலை இருந்தாலும் அவற்றில் நீங்கள் பணியாற்றி அவற்றில் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னேறி செல்ல வேண்டும். இங்கு பங்கேற்றுள்ள நிறுவனங்களில் நீங்கள் நல்ல முறையில் நேர்கானலில் பங்குகொண்டு வேலை வாய்ப்பு பெறவேண்டும். எனவே இளைஞர்கள் இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்றைய முகாமில் 2,238 பேர் கலந்து கொண்டனர். அதில் 335 பேருக்கு நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்கு நர்லதா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர் சபீனா பானு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×