என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திய கலெக்டருக்கு பாராட்டு
- புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
- மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தை விளக்கி பேசினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நாகையில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், "மானுடம் வெல்லும்" என்ற தலைப்பில் நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் பேசினார்.நாகூர் தர்கா, வேளா ங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் மதங்களை கடந்து மக்கள் வந்து செல்வதன் மூலம் மானுடம் வென்றது. மண்டைக்காடு கலவரத்தின் போது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, சைவ மடாதிபதியான குன்றக்குடி அடிகளார் மீன் கூடையை சுமந்து சென்றதையும், மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.
புத்தக திருவிழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.