search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம்
    X

    நடனம் ஆடிய மாணவிகள்.

    அரசு பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம்

    • அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் காமலாபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    ஓமலூர் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் காமலாபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஓமலூர் வட்டாரத்தை சேர்ந்த 59 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

    மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகள் வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மயிலாட்டம், ஒயிலாட்டம், நடனம், நாட்டியம், பறையாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பாரம்பரிய சாமியாட்டம், நுண்கலை, வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடன நாடகம், விழிப்புணர்வு நாடகம், கலாச்சார நாடகம், குடும்ப உறவு ஒற்றுமை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்தி காட்டி அசத்தி வருகின்றனர்.

    இந்த போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகள், மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் ஒவ்வொரு தலைப்புகளை கொண்டு கலை நிகழ்சிகளை தத்ரூபமாக நடத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஓமலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனுஜாவுடன் இணைந்து ஒன்றிய குழு உறுப்பினர் செல்விராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி கணேசன் ஆகியோர் செய்துள்ளனர். கலை போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×