என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சரவணம்பட்டியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
- 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர்.
- நடன ஆசிரியர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் சரவணம்பட்டி- காளப்பட்டி ரோட்டில் கரும்பு ஜூஸ் மற்றும் தர்பூசணி பழ கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து ஜூஸ் குடித்தும், பழங்கள் வாங்கியும் முழு பணத்தை தராமல் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கடைக்கு வந்து பழங்கள் வாங்கி பணத்தை தராமல் இருந்தார்.இதனால் சசிகுமார் அவரை கண்டித்து அங்கிருந்து ெசல்லுமாறு கூறினார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த வாலிபர் தனது 2 நண்பர்களை அழைத்து சசிகுமார் கடைக்கு வந்தார்.
அங்கு 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர். அதற்கான பணத்தை சசிகுமார் கேட்டார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரிடம் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து சசிகுமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கணபதியை வ.உ.சி நகரை சேர்ந்த நடன ஆசிரியர் நித்திஷ்குமார் (21), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் (40) மற்றும் பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த மோகன் பிரசாத் (29) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணம்பட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.