என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தட்டார்மடம் அருகே 2 பேரை கொல்ல முயற்சி - கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
- சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளம்:
உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த வர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (வயது 28).
கொல்ல முயற்சி
இவர் முன்விரோதம் காரணமாக தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த அருண் பாண்டி (22), சீனி (28) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சரத்கு மாரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரைத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், கைதான சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ெஜயிலில் அடைக்கப் பட்டார்.