search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 15 நாள், 20 நாள் ஆகிறது.
    • குடிநீர் பிரச்சினையால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சூயஸ் குடிநீர் திட்டப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர்.

    கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-

    மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும்.

    தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 15 நாள், 20 நாள் ஆகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனது வீட்டுக்கு குடிநீர் வந்து 18 நாட்கள் ஆகிறது.

    வடக்கு மண்டலம் 19-வது வார்டில் வாரம் ஒரு முறை குடிநீர் வருகிறது. அங்கு வரும் போது, மற்ற வார்டுகளில் ஏன் வினியோகம் செய்ய முடியவில்லை. இது மிகவும் கவலை தரும் விஷயமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன், உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×