search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்
    X

    பிளாஸ்டிக் தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம்.

    பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது குறித்த கூட்டம் நடத்தப்பட்டது.
    • அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மாறாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்திரவின்படியும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைகளின்படியும் சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது குறித்த கூட்டம் சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி, துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பக்ருதீன், திருமால், குணசேகர், வணிக சங்கத் தலைவர் சிவக்குமார், வணிக சங்க மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், வணிக சங்க பொருளாலர் செந்தில் தன்னார்வலர்கள் கோபாலன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கல்யாண குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், வணிக சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்று பொருட்கள் பயன்படுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    மேலும், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மாறாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் லால்பகதுர் சாஸ்திரி, ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×