என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
- வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் முன்னிலை வகித்தார்
- மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க வேண்டி வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாணியத் தெரு, செட்டி தெரு, வடுக தெரு ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம், 5 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இப்பேரணியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை அமுதா மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.