search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெலவர்த்தி ஊராட்சியில் சேரும்   குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை-  பொதுமக்கள் குற்றச்சாட்டு
    X

    பெலவர்த்தி ஊராட்சியில் சேரும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை- பொதுமக்கள் குற்றச்சாட்டு

    • பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.
    • வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினமாக நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டனி, வேளாண் அலுவலர் திருமால், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா உள்ளிட்ட அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    அப்போது வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.

    அவர்கள் மூட்டையை பிரித்து அதில் இருந்த குப்பையை அங்கு கொட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊராட்சியில் சேரும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. அள்ளப்படும் குப்பைகளும் எம்.சி., பள்ளி சாலையில் உள்ள வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் கூறியதாவது:-குப்பைகள் அள்ளுவதற்கோ, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவோ போதிய நிதி அரசிடமிருந்து வருவதில்லை. அதனால்தான் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கிராம சபை கூட்டத்தில் புகார் மனுவிற்கு பதில், குப்பைகளை கொட்டி பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் மகராஜகடை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×