search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருகார்த்திகையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது
    X

    திருகார்த்திகையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது

    • நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில், கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி இன்று மாலை நெல்லை யப்பர் கோவிலில் சாயரட்சை பூஜைகள் முடி வடைந்ததும் சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெறு கிறது.

    தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்து சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாரா தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை இந்த பரணி தீபம் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும். தொடர்ந்து மகா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    Next Story
    ×