search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.25 லட்சத்தில் சமையல் அறை  கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை
    X

    கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 1-வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. பார்வையிட்டபோது எடுத்த படம்.

    ரூ.25 லட்சத்தில் சமையல் அறை கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை

    • முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.
    • மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி 23-வது வார்டு ராசுவீதியில் உள்ள தொடக்க பள்ளியில் பொது நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நிரந்தர சமையல் அறை கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் வசந்தி, பொறியாளர் சேகரன், இளநிலை பொறியாளர்கள் அறிவழகன், உலகநாதன், கவுன்சிலர்கள் தேன்மொழி மாதேஷ், பாலாஜி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 1-வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வை யிட்டார்.

    மேலும் மகளிரிடம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பேசினார். அப்போது நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நிர்வாகி அன்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×