என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெலமங்கலத்தில் ரூ.78 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை
- இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.
- சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளி சாலை இருதாளம் முதல் மஞ்சளகிரி வரை ஒசூர் சாலையில் 11 கி.மீ நீளத்துக்கு ரூ.78 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் சாலை விரிவாக்கம் திட்டத்தில் இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை தேன்கனிக்கோட்டை கோட்ட பொறியாளர் திருமால்செல்வன், கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், திம் ஜேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், ஒப்பந்ததாரர் சேகர், தளி ஒன்றிய கவுன்சிலர் பிரசாந், முன்னால் கவுன்சிலர் நாகராஜ், நகர செயலாளர் மது குமார், துணைசெயலாளர் குருராஜ், மகளீர் அணி மஞ்சுளா, சீனிவாசன், உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானபேர்கள் கலந்து கொண்டார்கள்.