search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில்  அரசு திட்ட பணிகளுக்கு பூமிபூஜை
    X

    இம்மிடிநாயக்கனபள்ளி பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ேஹம்நாத் அரசு திட்ட பணிகளுக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்த காட்சி.

    இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் அரசு திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

    • ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் வேப்பனஹள்ளி தொகுதி ,சூளகிரி ஒன்றியம், இம்மிடி நாயக்கன பள்ளி ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் 15-வது நிதிகுழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.34.12 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இம்மிடி நாயக்கனபள்ளி ஊராட்சிக் குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தங்கள் பகுதியில் சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மன் அவர்களிடம் ஒன்றிய குழு உறுப்பினர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    அதன் பின் ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அதிகாரி களுடன் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதிய ளித்தார்.

    அதனடிப் படையில் கும்மனூர் சாலை முதல் வேட்டியம்பட்டி சாலை வரை தார் சாலை அமைக்க சுமார்.ரூ.21.62 லட்சம் மதிப்பிலும், கும்மனூர் கிராமத்தில் கோவில் அருகில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், சீகலபள்ளி கிராமத்தில் ரட்சை முதல் நாராயன சாமி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பிலும், மேடுபள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. இதனை ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ேஹம்நாத் தொடங்கி வைத்தார். இதற்காக ஒன்றிய குழு தலைவருக்கு கிராம பொதுமக்கள் பாராட்டுக் களையும் தெரிவித்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் லதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயன்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நவீன்ந்தரன், மாரியப்பன், ரவி கிரன், ஊராட்சி கழக செயலாளர் வெங்கட்ராஜ், ஊர் கவுண்டர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×