என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனாடு கிராமத்தில் பல்லுயிர் பாதுகாப்பு முகாம்
Byமாலை மலர்17 Sept 2023 3:15 PM IST
- நீலகிரி மாவட்டம் தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
- முகாமில் பொதுமக்கள். மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கீழ் கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமைதாங்கினார்.
அப்போது வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. பொதுமக்களின் சந்தேகத்திற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு முகாமில் தேனாடு, கோக்கால், மெட்டுக்கல் கிராம பொதுமக்கள் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×