என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல்களை காலதாமதம் இன்றி உறவினர்களிடம் வழங்க வேண்டும்-பொதுஜன நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
- ஒருசில வார்டுகளில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர உள் நோயாளியாகவும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கால தாமதம்
இங்கு ஒருசில வார்டு களில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.
மாறாக அதே படுக்கையில் நீண்டநேரம் இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிறது. அதனை உடனடியாக வேறு தனி அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கை
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்கத்தின் தலைவர் முகமது அயூப், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்து இருந்தார்.
அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இறந்தவர் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பணியாளர்கள் தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் புகார் கூறி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
குறிப்பிட்ட வார்டில் ஒரு நபர் இறந்து விட்டால் உடனடியாக வேறு ஒரு தனி அறைக்கு மாற்ற வேண்டும். அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கால தாமதப்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பொதுஜன நல சங்கத்தினர் மனு அளித்தனர்.