search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் தொடங்க போவதாக கூறி காதலியிடம் 16 பவுன் நகை மோசடி செய்த காதலன்: குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு
    X

    தொழில் தொடங்க போவதாக கூறி காதலியிடம் 16 பவுன் நகை மோசடி செய்த காதலன்: குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு

    • இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
    • அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் மரியபிரகாசம் மகள் ஜெனிலாமேரி (வயது 34). இவர் பள்ளியில் படிக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகி வந்தார். ஐஸ்வர்யாவின் உறவினரான விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்த சுதாகர் (38) என்பவருடன் ஜெனிலாமேரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்ம தத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுதாகருக்கும், ஜெனிலாமேரிவுக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பணம் தேவை படுவதாகவும் ஜெனிலா மேரியிடம் சுதாகர் கேட்டுள்ளார்.

    திருமணத்திற்காக வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் ஜெனிலாமேரி கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட சுதாகர், நாளடைவில் ஜெனிலாமேரியிடம் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஜெனிலாமேரி, திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாமென சுதாகரிடம் கேட்டுள்ளார். விரைவில் கூறுகிறேன் என்று பதில் கூறியுள்ளார். 16 பவுன் நகையை எப்போது திருப்பி தரப்போகிறாய் என ஜெனிலாமேரி கேட்டுள்ளார். இதற்கு பதில் கூறாமல் செல்போனை துண்டித்த சுதாகர், கடந்த ஒரு வார காலமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    மேலும் அதிர்ச்சிக் குள்ளான ஜெனிலாமேரி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் கூறி யுள்ளார். அவர்கள் சுதாகரின் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத் தியபோது, அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர். இதையடுத்து இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம், ஜெனிலா மேரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் சுதாகர் மீது நகை மோசடி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள சுதாகரை குறிஞ்சிப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகி ன்றனர். இந்த சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பர பரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    Next Story
    ×