என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீடுகளில் இரவில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ: விளக்கேற்றி பெண்கள் வழிபாடு!
Byமாலை மலர்8 July 2023 1:13 PM IST
- இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.
- வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.
திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இ.பி காலனியை சேர்ந்த சமேஸ்வரி என்பவரது வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இவர் கடந்த 3 வருடமாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். முதல் முறையாக நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பிரம்ம கமலம் மலருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
அதேபோல் முள்ளிப்பாடி அன்னை நகரை சேர்ந்த வசந்தா மகேஸ்வரி என்பவர் கடந்த 1 வருடமாக பிரம்ம கமல செடி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பூவிற்கு விளக்கேற்றி நிறைகுட செம்பில் தண்ணீர் வைத்து வழிபாடு நடத்தினர்.
வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Next Story
×