என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மானூர் கோவில் திருவிழாவையொட்டி ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு- தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா வழங்கினார்
- மானூர் பகுதியில்அம்பலமான சுவாமி கோவிலின் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.
- பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் இன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் பகுதியில் அம்பலமான சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி நெல்லை கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் இன்று ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. டவுன் உழவர் சந்தை அருகே உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் நடந்த இந்த விழாவில் தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆறுமுகராஜா கலந்து கொண்டு ஆதரவற்ற பெண் குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் மானூர் அருகே உள்ள மாவடி சமுதாய நலக்கூட வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டார். இதில் மாவடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது இப்ராகிம் தன்சில் ரோஸ், துணைத் தலைவர் மாரிச்செல்வி, விவசாய சங்க தலைவர் முகமது இப்ராகிம், மாவடி முருகன், ஆட்டோ கருப்பசாமி, சங்கரபாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.