search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தாய்ப்பால் வார விழா
    X

    அரசு பள்ளியில் தாய்ப்பால் வார விழா நடந்தது.

    அரசு பள்ளியில் தாய்ப்பால் வார விழா

    • தாய்ப்பால் வார நிகழ்ச்சியை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
    • கர்ப்பிணி பெண்கள் கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம் ஆகும். இதனை அடுத்து ஆங்காங்கே தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் ஒன்றியத்தி–ற்குட்பட்ட மதுக்கூர் வடக்கில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கமும், மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்திய தாய்ப்பால் வார நிகழ்ச்சியை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு லயன் தலைவர் கோவிந்தராஜ் தலைமை ஏற்றார். மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.கே.ஆர். நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், சித்த மருத்துவர் கீதா, கிராம சுகாதார செவிலியர் பரமேஸ்வரி ஆகிய முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சரவணன் வரவேற்றார்.

    இதில் பலர் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து எடுத்து கூறினார்கள். கர்ப்பிணி பெண்கள் கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள். இதை அடுத்து முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். இறுதியாக செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    Next Story
    ×