என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருக்கல்வாடியில் எருதாட்டம்250 காளைகள் பங்கேற்பு
- பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும்.
- அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடியில் பிரசித்தி பெற்ற பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு ேகாவில் மாடு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருக்கல்வாடி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, முனியம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த காளைகள் 3 முறை கோவிலை வலம் வர செய்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அந்த மாடுகள் முன்பு துணியால் செய்த பொம்மைகளை காண்பித்து இளைஞர்கள் விளையாட்டு காட்டினர்.
இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.