search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
    X

    போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை படத்தில் காணலாம்.

    விளாத்திகுளம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

    • புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    விளாத்திகுளம்:

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு சீறி பாய்ந்த காளைகளை இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, தனலட்சுமி டிம்பர்ஸ் உரிமையாளர் வாசுதேவன், சோலைசாமி, மருது பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×