என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பஸ்கள் செல்வதை தடுக்க வேண்டும்- போக்குவரத்து துறைக்கு இந்து முன்னணி கோரிக்கை
- அரசு பஸ்கள் ஆறுமுகநேரியை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக செல்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
- சாலையோர நடைபாதை சேதமடைந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் நகர இந்து முன்னணியின் புதிய நிர்வாகிகள் தேர்விற்கான கூட்டம் நடைபெற்றது.திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து முன்னிலை வகித்தார்.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசுராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி தலைவராக வெங்கடேசன், பொதுச் செயலாளராக பழனி ராஜன், பொருளாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்களாக சுரேஷ் கண்ணன், செல்வ குரு, ஆனந்த குமார், பாரதி ராஜா ஆகியோரும் செயலாளர்களாக மணிகண்டன், தியாகராஜன், பழனி, பரத் கண்ணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக சிவலிங்கம், ஜெகன், முருகன், மணிகண்டன், ஹரிஹரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகனங்கள் சிக்கி திணறுவதை தவிர்க்க காலை, மாலை வேளைகளில் போலீசாரை நிறுத்த வேண்டும் என்றும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஆறுமுகநேரியை தவிர்த்து விட்டு காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக செல்வதை போக்குவரத்து கழக அதிகாரிகள் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூருக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சாலையோர நடைபாதை சேதமடைந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்றும் ஆறுமுகநேரியில் அனைத்து வார்டுகளிலும் இந்து முன்னணி கிளைகளை அமைப்பது, இந்து அன்னையர் முன்னணி சார்பில் சுமங்கலி பூஜை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.