search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டியில் கண்காணிப்பு காமிரா உதவியால் சிக்கிய செல்போன் கொள்ளையர்கள்
    X

    கருமத்தம்பட்டியில் கண்காணிப்பு காமிரா உதவியால் சிக்கிய செல்போன் கொள்ளையர்கள்

    • கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர்கள் தங்கும் அறையில் 5 செல்போன் திருட்டு போனது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் பொரு த்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    இந்த நிலையில் கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனை அருகே, 3 வட மாநில வாலி பர்கள் செல்போன்களை குறைந்த விலையில் விற் பனை செய்வதாக தனிப்படை போலீஸ்சா ருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் மாலிக், பிரதாப்மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் என்பதும், அவர்கள் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர் விடுதியில் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில் இந்த வழக்கில் துப்பு துலக்க சிசிடிவி காமிராக்கள் உதவியாக இருந்தது. எனவே அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×